கொள்ளை அடித்துவிட்டு நாமம் வரைந்து சென்ற கொள்ளையர்கள்!

மதுரை அருகே அப்பளம் தயாரிக்கும் நிறுவனத்தில் கொள்ளையடித்த நபர்கள் அங்கிருந்த சுவரில் நாமம் வரைந்த தோடு திருடிய பொருட்களை வரிசையாக எழுதியும் வைத்து விட்டு சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை ஒத்தக்கடை பகுதியை சேர்ந்த பாலசுப்ரமணியம், விஜய் ஆகிய இருவரும் சேர்ந்து மதுரை மாநகரில் அப்பளம் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகின்றனர்.

 

கடந்த சில தினங்களுக்கு முன்பாக இந்த நிறுவனத்தில் பணம் திருடப்பட்டது தொடர்பாக, காவல் துறையிடம் எந்தவிதமான புகார் அளிக்காமல் இருந்துள்ளனர், இதனால் இந்த நிலையில் அதே அப்பள கம்பெனியின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த கொள்ளையர்கள் அங்கிருந்த கணினி, தராசு, ஒரு லட்சம் ரூபாய் பணம் உள்ளிட்டவற்றை கொள்ளையடித்துள்ளனர்.

 

தொடர்ந்து சுவற்றில் கொள்ளையர்கள் எந்தெந்த பொருட்களை கொள்ளை அடித்தனர் என்பது குறித்து வரிசையாக எழுதி வைத்து விட்டுச் சென்றுள்ளனர்.அவர்கள் 2 பேரும் இருசக்கர வாகனத்தில் வந்து கொள்ளையடித்த தோடு பொருட்களை மூட்டையாகக் கட்டி எடுத்துச் சென்ற காட்சிகள் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இது குறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கொள்ளையரை தேடி வருகின்றனர்.


Leave a Reply