600 பெண்களின் ஆடையை கழற்ற கூறி ஏமாற்றிய கொடூரன்!

ஆங்கிலம் பேசக்கூடிய 600 இளம்பெண்களை தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மிரட்டி நிர்வாண படத்தைப் பார்த்து ரசித்த கொடூர சைக்கோ. தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தன்னுடைய ஆபாச படங்களை வைத்து இளைஞர் ஒருவர் வருவதாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை விசாரித்த போலீசார் சென்னை திருவொற்றியூர் பகுதியைச் சேர்ந்த 33 வயது இளைஞன் கைது செய்தனர். அவர் பயன்படுத்தி வந்த மொபைல் போன் ஒன்றும், 2 சிம் கார்டுகளையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வந்தன.

 

விசாரணை செய்ததில் பல திடுக்கிடும் சம்பவங்கள் கிடைத்தன.சென்னை திருவொற்றியூரைச் சேர்ந்த பிரதீப் திருமணமானவர். சென்னையில் உள்ள பிரபல ஐடி நிறுவனமான டிசிஎஸ் இல் பணியாற்றி வந்தார். மனைவி பகல் நேர வேலைக்கு செல்ல., பிரபு பணிக்குச் சென்று உள்ளார். இதனால் கணவன் மனைவி இடையே நெருக்கமான உறவு இல்லை. பாலியல் தேவைக்காக இயங்கிவந்த பிரதீப் அதை தீர்த்துக்கொள்ள கொடூரமான முடிவை எடுத்துள்ளார்.

 

அதற்காக பிரபல வேலைவாய்ப்பு இணைய தளமான quicker.com இல் பதிவு செய்த பெண்களை குறி வைத்துள்ளார். அதில் வேலைக்காக போன் நம்பருடன் பதிவு செய்த பெண்களை தேடி எடுத்துள்ளார். அதிலும் குறிப்பாக ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்களில் வரவேற்பாளர் பணிக்கு விண்ணப்பித்து அவர்களை குறி வைத்துள்ளார் அவர்களை தொடர்பு கொண்டு பிரபல ஸ்டார் ஹோட்டல் தேர்வு செய்யும் குழுவில் இருந்து பேசுவதாக ஏமாற்றியுள்ளார். அந்த பெண்களிடம் உரையாடி எந்த அளவிற்கு அந்த வேலைக்கு செல்ல ஆர்வம் உள்ளவராக உள்ளார் என்பதையும் தெரிந்து இருக்கிறார்.

அதிக ஆர்வம் கொண்டவர்களை கண்டுபிடித்து அவர்களிடம் இருந்து அர்ச்சனா ஜெகதீஷ் என்பவர் உங்களை வாட்ஸ்அப் மூலம் தொடர்புகொண்டு நேர்காணல் நடத்துவார், என கூறி இணைப்பை துண்டித்து விடுவார். பின்னர் ஓரிரு நாள் இடைவெளி விட்டு அர்ச்சனா ஜெகதீஷ் என்ற பெயரில் பிரதீபா மற்றொரு எண்ணிலிருந்து வாட்ஸ்அப் மூலமாக அந்த பெண்ணை தொடர்பு கொள்வார். முதலில் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ கேட்பார் பின்னர் ஃபுல் சைஸ் போட்டோ அதனைப் பெற்றுக்கொண்டு முதல் ரவுண்டு இன்டர்வியூ முடிந்து விட்டது. பின்னர் அழைப்பதாக கூறுவார் பின்னர் இரண்டாவது ரவுண்ட் இன்டர்வியூ எனக்கூறி வாட்ஸ் அப்பில் அர்ச்சனா ஜெகதீஸ்வரி மீண்டும் அந்த பெண்ணை தொடர்பு கொள்வார்.

 

ஹோட்டலில் வரவேற்பாளர் பணிக்கு உடல் கட்டமைப்பு அவசியம் எனவும், எனவே உங்கள் ஆடைகளை களைந்து உடலில் முன்பக்கமும் மற்றும் பின்பக்கமும் நிர்வாண படங்களை அனுப்புமாறு அந்த பெண்களை பிரதீப் கேட்பார். பிரதீப் கூறுவதைக் கேட்டு எதிர் முனையில் உள்ள பெண்கள் சற்று அதிர்ந்து போவார்கள். லாவகமாக பேசி வரவேற்பாளர் ஆள் எடுக்கும்பொழுது கடைபிடிக்கப்படும் சாதாரண நடைமுறை தான் என்றும், இந்த புகைப்படங்கள் ரகசியம் காக்கப்படும் என்றும், தங்கள் ஹோட்டல் பிரபலமானது மற்றும் நம்பகத்தன்மை வாய்ந்தது என நம்பும் வகையில் பேசி நிர்வாணப் படங்களை வாங்கி விடுவார்.

 

அதன் பின்புதான் பிரதீப் தனது வேலைகளை காட்ட தொடங்குவார் வீடியோ கால்கள் மூலம் நிர்வாண படங்கள் அனுப்பிய பெண்களை நேரடியாக தொடர்பு கொண்டு பிரதீப் மிரட்ட தொடங்குவார்.ஒரு கட்டத்தில் என்ன செய்ய வேண்டும் என அந்த பெண்கள் கெஞ்சிக் கேட்கும் வரை விட மாட்டார். பின்னர் அவர்களின் ஆடைகளை ஒவ்வொன்றாக களைய சொல்லி வீடியோ காலில் பார்த்து ரசிக்கும் கொடூர சைக்கோ பிரதீப் என்கின்றனர் காவல்துறையினர்.

 

தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்டிரா, ஆந்திரா, டெல்லி, உத்திரப்பிரதேசம் உட்பட இந்தியாவின் 16 மாநிலங்களைச் சேர்ந்த 600 பெண்களை ஏமாற்றி ஆடைகளைக் களையச் சொல்லி அவர்களின் வீடியோக்களை தனது செல்போனில் பதிவு செய்து வைத்துள்ளார்கள். அந்த படங்களை வைத்து பெண்களை மிரட்டி லட்சக்கணக்கில் பணம் பறித்துள்ளார்.

 

இந்த போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை மனைவி பார்த்து விடாமலிருக்க தனது மொபைலில் தனியாக பாஸ்வேர்டு உருவாக்கி சேமித்து வைத்திருந்தது போலீசார் விசாரணையில் தெரிய வந்ததையடுத்து பிரதீப்பை கைது செய்த சைதராபாத் போலீசார் பெண்களையும் ஆபாச படங்களை பதிவு செய்த மொபைல் போன் மற்றும் பெண்களை தொடர்புகொள்ள பயன்படுத்திய இரண்டு சிம் கார்டுகளை பறிமுதல் செய்தனர்.


Leave a Reply