மத்திய உளவுத்துறையின் எச்சரிக்கையை அடுத்து துப்பாக்கி ஏந்திய கமாண்டோ படையினர் கோவை மாநகர காவல் துறையினருடன் இணைந்து காந்திபுரம் பகுதியில் பேருந்து நிலையங்கள் மற்றும் வணிக வளாகங்களில் தீவிர சோதனை !!!

கோவையில் 6 பேர் கொண்ட தீவிரவாத கும்பல் பதுங்கி இருப்பதாக வந்த மத்திய உளவுத்துறையின் எச்சரிக்கையை அடுத்து துப்பாக்கி ஏந்திய கமாண்டோ படையினர் கோவை மாநகர காவல் துறையினருடன் இணைந்து காந்திபுரம் பகுதியில் பேருந்து நிலையங்கள் மற்றும் வணிக வளாகங்களில் தீவிர சோதனை நடத்தினர்.

 

கோவையில் ஆறு பேர் கொண்ட தீவிரவாதிகள் கும்பல் பதுங்கியிருப்பதாக வந்த மத்திய உளவு பிரிவின் எச்சரிக்கையை அடுத்து கோவை மாவட்டம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.துப்பாக்கி ஏந்திய கமாண்டோ படையினர் மாநகர காவல்துறையினருடன் இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி கோவை காட்டூர் காவல்நிலையத்திற்குட்பட்ட காந்திபுரம் பகுதியில் மாநகர காவல் ஆய்வாளர் சிவகுமாருடன் துப்பாக்கி ஏந்திய கமண்டோ படையினர் 40 பேர் மோப்ப நாய் மற்றும் மெட்டல் டிடக்டர் கருவியுடன் மாநகர பேருந்து நிலையம்,வெளியூர் பேருந்து நிலையம்,அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்து நிலையம் மற்றும் கிராஸ்கட் சாலை உள்ளிட்ட பகுதிகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

 

பேருந்துகளில் ஏறி பயணிகளின் உடமைகளை வெடிகுண்டு சோதனையிடும் கருவி மூலம் சோதனை மேற்கொண்ட அவர்கள் சந்தேகத்திற்கிடமாக பேருந்துகளில் இருந்த பார்சல்களை சோதனையிட்டு, பயணிகளிடம் அவை குறித்து விசாரணையும் மேற்கொண்டனர்.

இதேபோல் அனைத்து கடைகளிலும் சந்தேகத்திற்கிடமாக அமர்ந்திருந்த நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்ட கமாண்டோ படை மற்றும் போலீசார் அங்கிருந்த சிலரிடம் அடையாள அட்டைகளை வாங்கி பரிசோதித்தனர். இதேபோல் கிராஸ்கட் சாலை உட்பட காட்டூர் காவல்நிலையத்திற்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் தீவிர சோதனை மற்றும் விசாரணையில் ஈடுபட்டனர்.


Leave a Reply