கன்னியாகுமரி அருகே மாணவியை திருமணம் செய்வதாக கூறி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த காதலன் மற்றும் அவரது நண்பரை போலீசார் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியைச் சேர்ந்த பள்ளி ஒன்றில் 12ம் வகுப்பு படித்து வருகிறார்.
இவருக்கும் அருகே தொழில் பயிற்சி நிறுவனத்தில் படித்த மாணவர் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. மாணவியை திருமணம் செய்து கொள்வதாக கூறிய மாணவர் தனது நண்பருடன் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து உள்ளார். இதனால் மாணவி அவரிடம் இருந்து விலகியுள்ளார்.
இந்நிலையில் லியோ பிராங்க்ளின் என்பவர் மாணவியை சந்தித்துள்ளார் காதலன் திருந்தி விட்டதாகவும் அவருடன் சேர்த்து வைப்பதாக கூறி அழைத்து சென்றவர், மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த தோடு, மார்த்தாண்டம் பேருந்து நிலையத்தில் விட்டுச் சென்றுள்ளார்.
அங்கே, அழுதபடி நின்றிருந்த மாணவியிடம் காவல்துறை விசாரணை நடத்திய போது நடந்த அனைத்தையும் கூறியுள்ளார். இதனை அடுத்து விசாரணை நடத்திய போலீசார் பிராங்க்ளின் மற்றும் காதலன் ஆகிய இருவரையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.