நெற்பயிரிட்ட இடத்தில் பருத்தி சாகுபடி செய்யும் விவசாயிகள்!

திருவாரூர் மாவட்டத்தில் நெல் சாகுபடிக்கு போதுமான தண்ணீர் இல்லாததால் மாற்றுப் பயிராக பருத்தி சாகுபடிக்கு மாறி வருகிறார்கள் விவசாயிகள். திருவாரூர் மாவட்டத்தில் நெல் சாகுபடியை பிரதான தொழிலாகும். ஆண்டுதோறும் குறுவை,, சம்பா தாளடி என 3 போகம் விவசாயிகள் நெல் சாகுபடி செய்து வந்தனர். ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் தண்ணீர் பிரச்சனை காரணமாக குறுவை சாகுபடி இல்லாமலே போய்விட்டது.

 

சம்பா சாகுபடி மட்டும் நடக்கிறது. அதிலும் நான்கு லட்சம் ஏக்கராக இருந்த சம்பா சாகுபடி 3 லட்சத்து 10 ஆயிரம் ஏக்கர் என்ற அளவில் சுருங்கி விட்டது. இதனால் மாற்று சாகுபடி செய்ய அரசு ஆலோசனைகளை வழங்கியதை அடுத்து ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரையிலான காலகட்டத்தில் கோடையில் சாகுபடியை தவிர்த்து, தற்போது விவசாயத்தில் விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.

 

இதன் காரணமாக கடந்த ஆண்டு திருவாரூர் மாவட்டத்தில் 8000 ஏக்கர் பரப்பிலானபருத்தி சாகுபடி செய்யப்பட்ட நிலையில் இந்த ஆண்டு 16 ஆயிரம் ஏக்கராக உயர்ந்துள்ளது. பருத்தி சாகுபடி செய்யும்போது ஒவ்வொரு பருத்தி செடியில் இருந்து மூன்று முறை பருத்தி பிஞ்சுகளை எடுத்து விற்பனை செய்ய முடியும். இதற்கு நெல் சாகுபடியை விட குறைந்த அளவு தண்ணீரே போதுமானது.

ஒரு ஏக்கர் பரப்பளவிற்கு 40 ஆயிரம் செலவு செய்தால் ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாயை தாண்டி லாபம் ஈட்ட முடியும் எனக்கூறி விவசாயிகள் தெரிவிக்கின்றனர். திருவாரூர் மாவட்ட பருத்தி கொள்முதலில் 2018 ஆம் ஆண்டு குவிண்டால் ஒன்றுக்கு 5 ஆயிரத்து 400 ரூபாய் விற்ற நிலையில் 2019 ஆம் ஆண்டில் 5 ஆயிரத்து 900 ரூபாய் அளவிற்கு விடை கிடைத்து வருகிறது.

 

இருப்பினும் ஒரே நேரத்தில் விவசாயிகள் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்ய முடியாத அளவுக்கு இடப்பற்றாக்குறை உள்ளதால், இடவசதி ஏற்று தர வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.


Leave a Reply