உரிமம் வழங்கும் வரை தண்ணீர் லாரிகளை இயக்க மாட்டோம் – கோவை தண்ணீர் லாரி உரிமையாளர்கள் எச்சரிக்கை
தமிழகத்தில் இயங்கி வரும் தண்ணீர் லாரிகளுக்கு முறையான உரிமம் வழங்கும் வரை கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக தமிழ்நாடு தண்ணீர் விநியோக உரிமையாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட தண்ணீர் லாரி உரிமையாளர்கள் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

இது குறித்து அவர்கள் கூறுகையில் தமிழகம் முழுவதும் 25000 லாரிகள் இயக்கப்படுவதாகவும்,அதில் கோவை மாவட்டத்தில் மட்டும் 3000 லாரிகள் இயங்கி வந்த நிலையில் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்து உள்ளதாக தெரிவித்தனர்.
இதனால் கல்வி நிலையங்கள், மருத்துவமனை,விடுதிகளில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது எனவும் தெரிவித்தனர். மேலும்,தமிழக அரசு தங்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தினர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




