அந்தணர்களுக்கென 100 ஆயுஸ் மருத்துவ விற்பனை நிலையங்களை துவங்க உள்ளதாக அந்தணர் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் பாலாஜி ஆத்ரேயா கோவையில் பேட்டி

அந்தணர்களுக்கென 100 ஆயுஸ் மருத்துவ விற்பனை நிலையங்களை துவங்கவும்,அதற்கான பயிற்சி மற்றும் வங்கி கடன் பெறுவது குறித்த விழிப்புணர்வு பயிற்சி அளிக்க உள்ளதாகவும் அந்தணர் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் பாலாஜி ஆத்ரேயா கோவையில் தெரிவித்துள்ளார்.

 

அந்தணர் முன்னேற்ற கழகத்தின் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கோவை வடவள்ளியில் உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்றது இதன் நிறுவனத் தலைவர் ராஜாளி ஸ்ரீ ஜெய் பிரகாஷ் ஐயர் தலைமையில் நடைபெற்றது.

இதில் கோவை மாவட்ட தலைவர் கோபாலகிருஷ்ணன் ஐயர்,பொருளாளர் வினோத் சிவாச்சாரியார் செய்தித் தொடர்பாளர் விஜயன் சிவாச்சாரியார் அமைப்புச் செயலாளர் செந்தில்நாத சிவாச்சாரியார்,மகளிர் அணிச் செயலாளர் ஸ்ரீமதி வேதநாயகி மணிகண்டன் மற்றும் செல்லமுத்து சிவாச்சாரியார், கண்ணன் சிவாச்சாரியார் உட்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

 

கூட்டத்தில் அந்தணர் நலவாரியம் அமைக்கவும், திரைப்படங்களில் பிராமண சமுதாயத்தை அவமதித்து கேலி கிண்டல் செய்வதற்கு நிரந்தர தீர்வு அளிக்கும் வகையில் திரைப்பட தணிக்கை குழுவில் மறு வரையறை செய்ய தமிழக அரசை வலியுறுத்துவது என பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்த கூட்டத்தில் கோவை மாவட்ட மகளிர் அணி நிர்வாகிகள் திருமதி துர்கா, மகாலட்சுமி, கோமதி, அமலா, பூர்ணிமா, கனகதாரா, மதுரபாஷினி, சுப மீனாட்சி ,வித்யா என பலர் கலந்து கொண்டனர்.


Leave a Reply