திருவாடானை அருகே மான் மர்ம மரணம்

திருவாடானை தாலுகா அஞ்சுகோட்டை அருகே கரைய கோட்டை கிராமத்தில் உள்ள குட்டையில் மர்மமான முறையில் ஆண் மான் சுமார் 5 வயதுடை இறந்து அழுகிய நிலையில் கிடந்தது.

இந்த மான் இறந்து கிடந்ததை கண்ட கிராம மக்கள் வன சரக அலுவலுருக்கு தெரிவிக்கப்பட்ட பிறகு அருகிலேயே குழி தோண்டி அடக்கம் செய்யப்பட்டது. இப்படி மான்கள் அடிக்கடி இறப்பது வழக்கமான ஒன்றாகி விட்டது. கடந்த சில நாட்களாக மான்கள் நாய் கடித்து இறப்பதும் வேட்டையாடி இருப்பதும் வாடிக்கையாகிவிட்டது.


Leave a Reply