சிதம்பரத்தின் மேல்முறையீட்டு மனு வெள்ளிக்கிழமை விசாரணை!
முன்னாள் நிதியமைச்சர் பா.சிதம்பரத்தின். மேல்முறையீட்டு மனு மீது வரும் வெள்ளிக்கிழமை விசாரணை நடைபெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக சிபிஐ முன்னாள் நிதியமைச்சர் பா.சிதம்பரத்தை கைது செய்ய தீவிர முனைப்பு காட்டி வருகிறது .
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முறைகேடு நடைபெற்றதாகவும் இதில் முன்னாள் நிதி அமைச்சர் பா.சிதம்பரம் அவரை கைது செய்ய தற்போது சிபிஐதீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பான முன்ஜாமின் மனு மீதான மேல் முறையீட்டு மனு வரும் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் அவரைக் கைது செய்ய சிபிஐ இரண்டாவது நாளாக அவரை தேடி வருகிறது .பா சிதம்பரத்தின் முன்ஜாமின் மனுவை நேற்று டெல்லி உயர்நீதிமன்றம் நிராகரித்தது. டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தை அணுகினார் பா.சிதம்பரம். மனுவை உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு கொண்டுவர சிதம்பரம் தரப்பில் தீவிரமாக முயற்சிக்கப்பட்டது. சிதம்பரத்தின் மேல்முறையீட்டு மனு மீது வரும் வெள்ளிக்கிழமை விசாரணை.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




