ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் இருந்து சித்தோடு வரை 280 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நான்கு வழிச்சாலை விரைவில் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதியளித்துள்ளார். ஈரோட்டில் தனியார் கல்லூரி பொன்விழா நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய அவர் அவ்வாறு கூறினார்.
கல்விக்கு ஏராளமான திட்டங்களை அறிவித்ததன் விளைவாக கல்விக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்வதன் விளைவாக கல்வி கற்போரின் எண்ணிக்கை உயர்ந்து, இன்று தமிழகத்திலேயே உயர்கல்வி கொடுக்கக்கூடிய 48.6 சதவீதமாக உயர்ந்துள்ளது.
இந்தியாவிலேயே உயர்கல்வி படிப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பது தமிழ்நாடு என்பதை பெருமையுடன் சொல்வதாகக் கூறினார்.