இந்தியாவின் நான்கு மாநிலங்களில் இன்னும் சில மாதங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் 4 மாநிலங்களுக்கான தேர்தல் பொறுப்பாளர்களை பாஜக அறிவித்துள்ளது. ஹரியானா, மகாராஷ்டிரா, ஜார்கண்ட், டெல்லி ஆகிய நான்கு மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ளது.
இது தொடர்பாக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் நான்கு மாநிலங்களுக்கு தேர்தல் பொறுப்பாளர்களை அறிவித்த கட்சித் தலைவர் அமித்ஷா அவர்களிடம் தேர்தலில் வெற்றிபெற வைக்கப்பட்டுள்ள திட்டங்கள் குறித்து விவாதித்தார்.
மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் மற்றும் நரேந்திர சிங் தோமர் ஆம் ஆகியோர் டெல்லி மற்றும் ஹரியானா மாநிலத்தின் தேர்தல் பொறுப்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தின் பொறுப்பாளராக பூபேந்திர யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல் ஜார்கண்ட் மாநிலத்தின் தேர்தல் பொறுப்பாளராக ஓம் மாதுர் நியமிக்கப்பட்டு உள்ளார்.