ப. சிதம்பரம் வீட்டில் நோட்டீஸ் ஒட்டிய அதிகாரிகள்!

முன்னாள் நிதி அமைச்சர் ப சிதம்பரத்திற்கு டெல்லி நீதிமன்றம் முன்ஜாமீன் மறுத்துள்ளது. இந்நிலையில்அவர் இரண்டு மணி நேரத்துக்குள் ஆஜராக வேண்டும் என சிபிஐ அதிகாரிகள் அவர் வீட்டில் நோட்டீஸ் ஒட்டி உள்ளனர். ஆனால் சிதம்பரம் இன்னும் ஆஜராகவில்லை. மீடியா வழக்கில் சிபிஐ அதிகாரிகள் நேற்று மாலை டெல்லியில் அவர் வசிக்கக்கூடிய பகுதியிலுள்ள சிதம்பரம் அவர்களின் இல்லத்திற்கு நேரடியாக வருகை புரிந்து விசாரணை நடத்த முயன்றனர்.

 

ஏறத்தாள அரை மணி நேரம் காத்திருந்து ஏமாற்றம் அடைந்து சி‌பி‌ஐ அதிகாரிகள் திரும்பினர். பிறகு அந்த இல்லத்தில் இருந்து 5 மணி நேரம் சி‌பி‌ஐ ஆலோசனை கூட்டம் நடத்தினர். இதில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முக்கிய அம்சங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

 

இந்நிலையில் 11.15 மணிக்கு சிபிஐ ஒரு ஐந்து குழுவுடன் வந்து சிதம்பரம் வீட்டிற்கு வந்தாரா என்பது தொடர்பாக விசாரணை நடத்திவிட்டு அவர் வீட்டின் முன் நோட்டீஸ் ஒட்டி சென்றுள்ளனர். அந்த நோட்டீஸில் சரியாக இரண்டு மணி நேரத்திற்குள் சிபிஐ தலைமை அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர்.

 

விவகாரம் தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளனர். அவர் இன்னும் ஆஜராகவில்லை. சிதம்பரம் இன்னும் டெல்லியில் இருக்கிறாரா என்பது தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் மற்றும் அமலாக்கத்துறையினர் குழப்பத்தில் உள்ளனர். அவரை தேடும் பணியும் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.


Leave a Reply