இராமநாதபுரம் மாவட்டத்தில் ராஜீவ் காந்தியின் பிறந்த நாள் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இராமநாதபுரம் மாவட்டம் நகர் பகுதியில் தனியார் மஹாலில் முன்னாள் பிரதமர் மறைந்த ராஜீவ் காந்தியின் 75 வது பிறந்த நாள் விழா இராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் நடைபெற்றது.

மாவட்ட காங்., தலைவர் தெய்வேந்திரன் தலைமை வகித்தார். காங்., கமிட்டி உறுப்பினர் முருகேசன், முன்னாள் மாவட்ட தலைவர் பூவலிங்கம், இளைஞர் காங்., மாவட்ட தலைவர் சரவண காந்தி, மாவட்ட பொதுச் செயலாளர் மணிகண்டன், இலக்கிய அணி முருகேசன், மாவட்ட துணை தலைவர் முத்துராமலிங்கம், மாவட்ட பொதுச் செயலாளர் மேகநாதன், ஆதி திராவிடர் அணி ராஜசேகர், கணேசமூர்த்தி, இந்திய தேசிய டிரேட் யூனியன் காங்கிரஸ் நிர்வாகி பிச்சை, இளைஞர் காங்., ராஜீவ் காந்தி, வட்டாரத் தலைவர்கள் ராமர், புவனேஸ்வரன், ஓபிசி அணி மாவட்ட தலைவர் அஜிஸ் ஆபிரகாம், மகளிரணி முன்னாள் மாவட்ட தலைவி சரோஜா தேவி, மகளிரணி நகர் நிர்வாகி சிவகாமி தேவி, தங்கச்சி மடம் ஆறுமுகம், பேச்சாளர் விஜயன் உள்பட பலர் கலந்து கொண்டனர். விழாவில் பெண்கள் உள்பட 300 பேருக்கு ரூ.3 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.






