ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 7 பேர் விடுதலை தொடர்பாக அனுப்பிய தீர்மானம் குறித்து ஆளுநரிடம் விளக்கம் கேட்க முடியாது என தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்து இருக்கிறது.ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் ஏழு பேரையும் விடுவிக்க கோரி கடந்த பிப்ரவரி மாதம் நளினி அரசுக்கு மனு அனுப்பினார்.
இந்த மனுவை பரிசீலித்து தங்களை முன்கூட்டியே விடுவிக்க உத்தரவிட வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர் வழக்கும் தொடுத்தார். இதற்கு பதிலளித்த தமிழக அரசுமுன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என உரிமைகோர முடியாது என்றும், அது அரசின் தனிப்பட்ட அதிகாரத்துக்கு உட்பட்டது என்றும் தெரிவித்திருந்தது.
இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது 7 பேர் விடுதலை குறித்து அமைச்சரவை அனுப்பிய தீர்மானத்தின் நிலை குறித்துதமிழக அரசு ஆளுநரிடம் கேட்டறிய வேண்டும் என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. அதற்கு பதிலளித்த அரசு தரப்பு வழக்கறிஞர்அரசியலமைப்புச் சட்டம் 361 இன் படிதீர்மானத்தின் மேல் நடவடிக்கை குறித்து ஆளுநரிடம் விளக்கம் கேட்க முடியாது என தெரிவித்தார். இதையடுத்து வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.