திருவாடானையில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு நீர் வீணாகிறது

திருவாடானை அருகே வீணாகும் குடி நீர், அதில் குளிக்கும் வழிப்போக்கர்கள், சுகாதார கேடு என பொது மக்கள் புகார் திருவாடானை ஆக 21,திருவாடானையில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு வீணாகிறது. அதில் வழிப்போக்கர்கள் குளித்து வருவதால் மீண்டும் சுகாதார கேடு விளைகிறது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்தார்கள்.

 

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா, திருவாடானையில் மதுரை தொண்டி தேசிய நெடுஞ்சாலை இருபுறமும் குடிநீர் குழாய்கள் செல்கிறது. இந்த குடி நீர் குழாய்களை திருவாடானை ஊராட்சி நிர்வாகமும், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியமும் தனித்தனியே பராமரித்து வருகிறது. இந்நிலையில் சின்னகீரமங்களத்தில் இருந்து திருவாடானை வரை கல்லூர், பாரதிநகர், மங்களாகுளம் அருகே, பாரதிநகர் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு அருகே என பல்வேறு இடங்களில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு பல மாதங்களாக வீணாகிறது.

 

இது குறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தால் அது தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் வேலை என்றும் அவர்களிடம் சொன்னால் இது ஊராடச்சி நிர்வாகத்தின் பணி என மாறி மாறி குறை கூறிக்கொண்டே பல மாதங்களாக குடி நீர் வீணாகிறது என்று சமூக ஆர்வளர்கள் குறை கூறுகின்றனர். மேலும் மங்களநாதன் குளம் அருகே குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது.

உடன் வந்த அதிகாரிகள் ஜேசிபி எந்திரம் மூலம் தோண்டி அப்படியே விட்டுவிட்டு குடிநீர் உடைப்பை சரி செய்யாதால் அந்த இடத்தில் சிறிய குட்டை போல் குடிதண்ணீர் தேங்கி வீணாகிறது. அது மட்டுமல்லாமல் அப்படி தேங்கியருக்கும் தண்ணீரில் வழிப்போக்கர்கள் சோப்பு போட்டும் குளிக்கின்றனர்.

 

சில நேரங்களில் மண நேயால் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளே உட்கார்ந்து குளிக்கின்றனர். இந்த அசுத்த தண்ணீர் மீண்டும் குடி நீர் குழாய்களுக்குள் செல்கிறது. அதை குடிக்கும் மக்களுக்கு சுகாதார கேடு ஏற்படுகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்து குடி நீர் குழாய் உடைப்புகளை சரி செய்ய வேண்டும் என சமூக ஆர்வளர்கள் மற்றும் பொது மக்கள் கோரிக்க்கை வைத்தார்கள்.


Leave a Reply