பள்ளி மாணவர்களுக்கான கற்றல் குறைபாட்டை போக்குவது குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் !!!

பள்ளி மாணவர்களுக்கு இருக்கக்கூடிய கற்றல் குறைபாட்டை போக்குவது குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் கோவையில் நடைபெற்றது. ஒவ்வொரு ஆண்டும் கல்வியின் தரம் மற்றும் அதில் ஏற்படுத்தக்கூடிய மாறுதல்களை மத்திய மற்றும் மாநில அரசுகள் செய்து வந்தாலும் மாணவர்களுக்கு இருக்கக்கூடிய பொதுவான பிரச்சனையாக கற்றல் குறைபாடு உள்ளது.

இதனைப் போக்க அரசு மற்றும் தனியார் அமைப்புகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை ரேஸ்கோர்ஸில் உள்ள தனியார் அரங்கில் யாசா கல்வி குழுமம் மற்றும் பப்ளிக் சாரிட்டபிள் டிரஸ்ட் இணைந்து கற்றல் குறைபாடு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கத்தை நடத்தினர். இந்நிகழ்ச்சியை அவினாசி லிங்கம் பல்கலை கழகத்தின் துணை வேந்தர் பிரேமாவதி துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் மாணவர்களுக்குரிய கற்றல் குறைபாட்டை போக்க என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது குறித்து ஆசிரியர்களுக்கு விளக்கப்பட்டது. மேலும்,கல்விமட்டுமல்லாது மாணவர்களின் பலம் எதில் என்பதை அறிந்து அதனை மேம்படுத்த உறுதுணையாக இருக்க வேண்டும் என்றும் ஆசிரியர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய யாசா அகாடமியின் இயக்குனர் சுப்ரியா சதீஷ், மாணவர்களுக்கு உண்டான கற்றல் குறைபாட்டை முழுமையாக போக்குவதே தங்கள் நிறுவனத்தின் முதல் முயற்சி எனக் கூறினார்.


Leave a Reply