தோனி காஷ்மீரில் இருந்து டெல்லி திரும்பினார்!

தல தோனி ஜம்மு காஷ்மீரில் உள்ள ராணுவ குழுவினருடன் சேர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தார். தோனி தற்போது டெல்லி திரும்பி உள்ளார். உலகக் கோப்பை அரையிறுதியில் நியூசிலாந்திற்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா தோல்வியடைந்தது. இதையடுத்து தோனியை நீக்க வேண்டும் என ஒரு தரப்பினர் வலியுறுத்தினர்.

 

தோனியின் எதிர்காலம் குறித்த ஊகங்கள் தீவிரமடைந்தன. வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப் பயணத்திற்கான இந்திய அணியை பிசிசிஐ தேர்வு செய்தவுடன், தோனியின் எதிர்கால திட்டங்கள் குறித்த தெளிவான தகவல்கள் கிடைக்கும் என கூறப்பட்டது. தோனி துணை ராணுவ படைப்பிரிவுக்கு சேவை செய்ய விளையாட்டிலிருந்து இரண்டு மாத ஓய்வு எடுப்பதாக பிசிசிஐக்கு தெரிவித்தார்.

 

பிராந்திய ராணுவத்தின் பாராசூட் ரெஜிமென்ட்டில் கவுரவ லெப்டினன்ட் கர்னலாக இருக்கு தோனி கடந்த மாதம் காஷ்மீர் சென்று அங்கு ராணுவ குழுவினருடன் இணைந்து ரோந்து பணியில் ஈடுபட்டார்.


Leave a Reply