நீலகிரி மாவட்டத்திற்கு 1500 அரிசி மூட்டை ஸ்டாலின் வழங்கினார்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டிய மாவட்டமான நீலகிரியில் கடந்த சில தினங்களாக கனமழை கொட்டி தீர்த்தது. கடுமையான நிலச்சரிவால் மக்கள் மிகுந்த சிரமம் அடைந்தனர். இந்நிலையில் நீலகிரியில் கனமழை மற்றும் நிலச்சரிவு பாதித்த பகுதிகளுக்கு 15 லட்சம் மதிப்பிலான அரிசி மூட்டைகளை திமுக தலைவர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

 

மிகுந்த கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழக்கை பெரிதளவில் பாதிக்கப்பட்டு இருந்தது. இதனால் உயிர்ச்சேதமும் ஏற்பட்டு உள்ளது. கனமழையின் காரணமாக 5 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர்.கனமழையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு தரப்பிலும் பல்வேறு உதவி செய்யப்பட்டு வருகிறது.

 

இந்நிலையில் திமுக சார்பில் மக்களின் முக்கிய உணவுப்பொருளாக விளங்கும் அரிசி மூட்டை வழங்கப்பட்டு உள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் , திமுக காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம் சார்பில் மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டத்திற்கு 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான 1500 அரிசி மூட்டைகளை வழங்கினார்.

 

இதை வழங்கும் போது செயலாளர் டி.ஆர்.பாலு, அமைப்பு செயலாளர், ஆர், எஸ். பாரதி, காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட செயலாளர் ,தா.மோ. அன்பரசன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் உடன் இருந்தனர்.


Leave a Reply