தற்போது சின்னத்திரையில் நடித்து வருவதாகவும் இனி வாய்ப்புகள் கிடைத்தால் திரைப்படங்களில் நடிக்க தயார் என்று நடிகை தேவயானி தெரிவித்துள்ளார். கோவை அவிநாசி சாலையில் அமைந்துள்ள சுகுணா மண்டபத்தில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா மற்றும் வி.ஜி சார்பில் வீடு கடன் கார் கடன் கண்காட்சி இன்று முதல் இரண்டு நாட்களுக்கு நடைபெறுகிறது.
இதை எஸ்பிஐ யின் துணை பொது மேலாளர் மற்றும் நடிகை தேவயானி அவர்கள் துவக்கி வைத்தனர்.இதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய நடிகை தேவையானி இன்று ஒரு மனிதனுக்கு த வீடு மற்றும் கார் மிகவும் அவசியமான ஒன்றாகும்.
இதற்கான கடன் வசதி இந்த வங்கி தருவது மிகவும் வரவேற்கத்தக்கது என்று தெரிவித்தார் இதனை தொடர்ந்து பேசிய அவர் சின்னத்திரைக்கு வந்து நீண்ட காலம் ஆகி விட்டது என்றும் அதில் நடித்தாலும் எனக்கு ரசிகர்கள் உள்ளார்கள் என்றும்,இனி வாய்ப்புகள் கிடைத்தால் திரைப்படங்களிலும் நடிக்க தயார் என்று அவர் தெரிவித்தார்.