இராமநாதபுரம் மாவட்டத்தில் ரஜினி மக்கள் மன்றம் மற்றும் மதுரை தேவகி சிறப்பு மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச மருத்துவ சிறப்பு முகாம் !

இராமநாதபுரம் மாவட்டத்தில் இராமநாதபுரம் நகர் ரஜினி மக்கள் மன்றம் மற்றும் மதுரை தேவகி சிறப்பு மருத்துவமனை இணைந்து இருதயம் புற்று நோய் சர்க்கரை நோய்களுக்கான மாபெரும் இலவச மருத்துவ முகாம் கேணிக்கரை தனியார் மஹாலில் நடைபெற்றது.

இம்முகாமில் சிறப்பு சிகிச்சைகளாக ரூபாய் 2500 மதிப்புள்ள BP, Sugar,ECG,Echo scan, Doctor consulting மருத்துவ பரிசோதனைகள் மற்றும் இருதய நோய்க்கான சிறப்பு சிகிச்சைகள், ஆஞ்சியோகிராம் பரிசோதனை, ஆஞ்சியோபிளாஸ்டி, ஸ்டெண்ட் சிகிச்சை, இருதய வால்வு சுருக்கத்திற்கு பலூன் சிகிச்சை, பேஸ்மேக்கர் கருவி பொருத்துதல், இருதயத் துவாரங்களை கருவி கொண்டு மூடுதல் (ASD), புற்று நோய்க்கான சிறப்பு சிகிச்சைகள், கதிர்வீச்சு சிகிச்சை, அறுவை சிகிச்சை கீமோதெரபி சிகிச்சை, (அரசு காப்பீட்டு திட்டத்தின் கீழ்) சர்க்கரை நோயாளிகளுக்கான இலவச ரத்த பரிசோதனை, முகாமில் குறிப்பிட்ட நோய்களுக்கு மருந்து மாத்திரைகள் இலவசம், தமிழக அரசின் காப்பீட்டுத் திட்டத்தில் அதிக நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து தொடர்ந்து ஆறு வருடங்களாக மாநில அளவில் முதல் இடத்தில் தேவையை சிறப்பு மருத்துவமனை சேவை செய்து வருகிறது.

இந்நிகழ்ச்சியில்; செந்தில் செல்வாநந்தா தலைமை வகித்தார், மேலும் பிரபு மாவட்ட இணைச்செயலாளர்
கோகிலா மாவட்ட மகளிர் அணி செயலாளர் மதி சூடன் மாவட்ட இளைஞர் அணி இணைச் செயலாளர்
மணிகண்டன் மாவட்ட தகவல் தொழில்நுட்ப செயலாளர் கணேசமூர்த்தி நகரச் செயலாளர் இராமநாதபுரம் ரமேஷ் நகரத் துணைச் செயலாளர் மற்றும் கதிர் கார்த்திக் ஆட்டோ ஆனந்த் தம்பிதுரை மற்றும் ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.


Leave a Reply