பாகிஸ்தான் படைகள் ஜம்மு காஷ்மீர் எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்தி உள்ளது. இந்த பாகிஸ்தான் படைகள் தாக்குதல் நடத்தியதில் இந்திய ராணுவ ஒருவர் அதில் வீரமரணம் அடைந்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ராஜோரி எனும் மாவட்டத்தில் உள்ள ஒரு இடமான நவ்ஷரா செக்டாரில் எனும் இடத்தில் பாகிஸ்தான் பாதுகாப்பு படையினர் அத்துமீறி தாக்குதல் நடத்தி உள்ளனர். இந்த தாக்குதல் இன்று காலை 6.30 க்கு நடைபெற்றுள்ளது.
இந்த தாக்குதலுக்கு இந்திய ராணுவம் தரப்பிலும் பதிலடி கொடுக்கப்பட்டு உள்ளது. தாக்குதலில் கொல்லப்பட்ட ராணுவ வீரர் டேராடூனைச் சேர்ந்த லன்ஸ் நாயக் சந்தீப் என்ற 30 வயது உடையவர் எனவும் தெரிய வந்துள்ளது.லன்ஸ் நாயக் சந்தீப் இந்திய ராணுவத்தில் கடந்த 15 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தான் தரப்பில் இருந்து தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக ராணுவம் உஷார்நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் திடீர் தாக்குதலில் ஒருவர் மரணம் அடைந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.






