முன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி உடல்நிலை கவலைக்கிடம்

முன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கடந்த சில தினங்களுக்கு முன்பு உடல்நிலை சரி இல்லாத காரணத்தால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அவருக்கு கடந்த சில தினங்களாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 

தற்போது அவரின் உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டு உள்ளது.அவரது உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக செய்திகளும் பரவின. இதையடுத்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்,மத்திய அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் நள்ளிரவில் மருத்துவமனைக்கு சென்று அருண் ஜெட்லியின் உடல் நலம் குறித்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்களிடம் கேட்டு அறிந்தனர்.


Leave a Reply