எந்த ரூபாய் நோட்டு உண்மையானது என்று தெரியாமல் மக்கள் குழப்பம்

பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு அச்சடிக்கப்பட்ட 500 ரூபாய் நோட்டுகளில் ஏற்பட்ட பிழையால் அவை போலியானவை என்ற தகவல் பரப்பப்பட்டு வருகிறது. இந்தியாவில் பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொண்டபோது பழைய 500 ரூபாய்க்கு பதிலாக புதிய மாடல் 500 ரூபாய் நோட்டுகள் ரிசர்வ் வங்கியால் அச்சடிக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டன.

 

இந்நிலையில் தற்போது காந்திக்கு அருகே பச்சை நிற ஸ்ட்ரிப்புகள் உள்ள ரூபாய் நோட்டுகள் போலியானவை என்றும், கவர்னர் கையெழுத்து பக்கத்தில் பச்சை ஸ்ட்ரிப்கள் உள்ள நோட்டுகள் மட்டுமே அசலானவை என்றும் வாட்ஸ் அப் மூலமாக போலி தகவல் ஒன்று பரவி வருகிறது.

 

இதனால் மக்கள் எந்த ரூபாய் நோட்டு உண்மையானது என்று தெரியாமல் குழம்பி வருகின்றனர்.இதுகுறித்து செய்தி வெளியிட்டுள்ள ரிசர்வ் வங்கி இரண்டு வகையான நோட்டுகளுமே உண்மையானவைதான். பணமதிப்பிழப்பு சமயத்தில் அவசரகதியால் ஏற்பட்ட பிழை அது. இரண்டு நோட்டுகளுமே சட்டப்படி செல்லுபடியாகும் என தெரிவித்துள்ளது.


Leave a Reply