இராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே நாகாச்சி தேவர் நகரைச் சேர்ந்த செல்வம். இவரது மகன்கள் சுரேஷ்குமார் 37, குமார், 34. இருவரும் மீனவர்கள். சுரேஷ்குமாருக்கு 2 பெண் குழந்தைகள், குமாருக்கு தலா ஒரு பெண், ஆண் குழந்தை உள்ளனர்.
இராமநாதபுரம் முதல் மதுரை செல்லும் வழியில் உள்ள கோயில் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக,
இரு சக்கர வாகனத்தில் இராமநாதபுரம் வந்த இருவரும், இன்று மாலை வீடு திரும்பிய நிலையில் நகர் பகுதியில் அமைந்துள்ள அரசு போக்குவரத்து கழக பணி மனை எதிராக இந்த இருவரும் விரைவாக கடக்க முயன்றபோது சாலையில் குறுக்கிட்டவர் மீது இரு சக்கர வாகனம் மோதாமலிருக்க சுரேஷ்குமார் துரிதமாக பிரேக் அடைந்துள்ளார் என்று கூறப்படுகிறது.
இதில் தூக்கி வீசப்பட்ட இருவரும் சாலையில் நிலை தடுமாறி விழுந்துள்ளனர். அப்போது அதன் வழியாகச் சென்ற வேன் சக்கரத்தில் சிக்கிய சுரேஷ்குமார் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த குமார் , மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனை கொண்டு செல்ல இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து இராமநாதபுரம் நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.