அத்திவரதரை தரிசிக்க சென்ற முஸ்லிம் திமுக எம்.எல்.ஏ !

செஞ்சி தொகுதி திமுக எம்.எல்.ஏ.வும், விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளருமான கே.எஸ்.மஸ்தான் தனது குடும்பத்துடன் வந்து இன்று அத்திவரதரை தரிசனம் செய்தனர்.காஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜப் பெருமாள் கோயிலில் கடந்த ஜூலை 1-ம் தேதி முதல் அத்திவரதர் வைபவம் நடைபெற்று வருகிறது.

 

முதலில் சயனகோலத்தில் அருள் பாலித்த அத்திவரதர், கடந்த ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் நின்ற கோலத்தில் அருள்பாலித்து வருகிறார். நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமியை தரிசனம் செய்து வருகின்றனர். வரும் 16-ம் தேதியோடு அத்திவரதர் தரிசனம் நிறைவடைகிறது. இதனையடுத்து,17-ம் தேதி மீண்டும் அனந்தசரஸ் குளத்திற்குள் அத்திவரதர் குளத்திற்குள் வைக்கப்பட உள்ளார்.

இந்நிலையில், இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் லட்சக்கணக்கானோர் காஞ்சிபுரத்தில் குவிந்து வருகின்றனர். 45-வது நாளான இன்று பன்னீர் ரோஜா நிறத்தில் நீல சரிகை பட்டாடையில் ராஜ மகுடம் அணிந்து, பல வண்ண மலர் மாலைகள் அணிந்தவாரு பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார்.

இந்நிலையில், செஞ்சி தொகுதி திமுக எம்.எல்.ஏ.வும், விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளருமான கே.எஸ்.மஸ்தான் தனது குடும்பத்துடன் வந்து இன்று அத்திவரதரை தரிசனம் செய்தனர். மாற்று மதத்தை சேர்ந்தவரான மஸ்தான், அத்திவரதரை தரிசித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய போது, அத்திவரதர் அனைவருக்கும் பொதுவானவர். அத்திவரதரை இனி அடுத்து 40 ஆண்டுகளுக்கு பிறகே தரிசிக்க முடியும் என்பதால் இப்போது வந்து தரிசித்தேன் என்று கூறினார்.


Leave a Reply