சுதந்திர போராட்ட தியாகிகளுக்கான ஓய்வூதியம்ரூ.15,000ல் இருந்து ரூ.16, 000 ஆக உயர்த்தப்படுவதாக முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.சென்னை கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றி வைத்த முதலமைச்சர் பழனிசாமி பின்னர் மக்கள் மத்தியில் உரையாற்றினார்.
அப்போது, இந்தி பேசாத மாநிலங்களில் இந்தியை கட்டாயப்படுத்த கூடாத என்ற ஜெயலலிதாவின் கொள்கையை பின்பற்றுவதாகவும், இருமொழிக் கொள்கையில் தமிழக அரசு உறுதியாக உள்ளதாகவும் முதலமைச்சர் தெரிவித்தார்.
மேலும், அமைதி, வளம், வளர்ச்சி என்ற அடிப்படையில் தமிழக அரசு செயல்பட்டு வருவதாக தெரிவித்தஅவர், மக்களை பாதிக்கக் கூடிய எந்த திட்டமாக இருந்தாலும் அதனை தமிழக அரசு எதிர்க்கும் என கூறினார்.சுதந்திர போராட்ட தியாகிகளுக்கான ஓய்வூதியம் ரூ.15,000ல் இருந்து ரூ.16, 000 ஆக உயர்த்தப்படுவதாகவும்,சுதந்திர போராட்ட வீரர்களின் வாரிசுகதாரர்களுக்கான ஓய்வூதியம் ரூ.7,500ல் இருந்து ரூ.8,000 ஆக உயர்த்தப்படுவதாகவும் முதலமைச்சர் அறிவித்தார்.