இந்தியாவின் 73ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு கூகுள் நிறுவனம் சிறப்பு டூடுலை வெளியிட்டுள்ளது. நாட்டின் 73ஆவது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி இன்று காலை 7.30 மணியளவில் தேசியக் கொடியை ஏற்றினார்.
அத்துடன் நாடு முழுவதும் நடைபெறும் விழாவில் அந்தந்த மாநில முதல்வர்கள் தேசியக்கொடியை ஏற்றவுள்ளனர். மேலும் நாடு முழுவதும் சுதந்திர தின கொண்டாட்டம் கலைகட்டி உள்ளது.
இந்நிலையில் இந்தியாவின் 73ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு கூகுள் நிறுவனம் சிறப்பு டூடுலை வெளியிட்டுள்ளது. அது இந்தியாவின் சிறப்புகளை பறைசாற்றும் விதமாக அமைத்துள்ளது. இந்த டூடுலில் இந்தியாவின் தேசியக் கொடி மற்றும் ரயில் ஆகியவை இடம் பெற்றுள்ளன.