காஞ்சிபுரம் ஆட்சியருக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

அத்திவரதர் வைபவத்தின்போது, காவல் ஆய்வாளரை திட்டியது பற்றி பதிலளிக்க காஞ்சிபுரம் ஆட்சியருக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

 

அத்திவரதர் வைபவ பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் ஆய்வாளரை, காஞ்சிபுரம் ஆட்சியர் திட்டியது தொடர்பான வீடியோ காட்சிகள் சமீபத்தில் வெளியாகின. இந்த வீடியோ பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், காவல் ஆய்வாளரை திட்டியது பற்றி பதிலளிக்க காஞ்சிபுரம் ஆட்சியருக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

பொதுமக்கள், காவலர்கள் முன் ஆய்வாளரை திட்டியது மனித உரிமை மீறல் ஆகாதா?என கேள்வி எழுப்பியுள்ள மனித உரிமை ஆணையம், காஞ்சிபுரம் ஆட்சியர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன எனவும் கேட்டுள்ளது. அத்துடன் ஆட்சியர் மீதான நடவடிக்கை குறித்து தலைமைச்செயலர் பதிலளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.


Leave a Reply