ஓய்வூதியர் சங்கத்தின் 3வது மாவட்ட மாநாடு!மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்குவது போல் குறைந்த பட்ச ஓய்வூதியமாக 9 ஆயிரம் ரூபாய் வழங்குவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றம்

திய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்வது, மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்குவது போல் குறைந்த பட்ச ஓய்வூதியமாக 9 ஆயிரம் ரூபாய் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தமிழ்நாடு அரசின் அனைத்து துறை ஓய்வூதியர் சங்க மாநாட்டில் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டன.

 

தமிழ்நாடு அரசின் அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தின் 3வது மாவட்ட மாநாடு கோவை தாமஸ் கிளப்பில் நடைபெற்றது.இம்மாநாட்டில் 8வது ஓய்வூதிய திருத்தத்தின் 21 மாத நிலுவை தொகையை வழங்குவது, சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியமாக 8,750 ரூபாய் வழங்க கோருவது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

மேலும்,மத்திய அரசின் ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு வழங்குவது போல் மாநில அரசு ஊழியர்களுக்கும் 9000 ரூபாய் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை இம்மாவட்ட மாநாட்டின் முக்கிய தீர்மானமாக நிறைவேற்றப்பட்டன.

இம்மாநாடு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய இச்சங்கத்தின் மாநில துணை தலைவர் சந்திரன்,இக்கோரிக்கைகள் அனைத்தையும் வலியுறுத்தி செப்டம்பர் 14 ஆம் தேதி சேலத்தில் மாநில மாநாடு நடத்தப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.


Leave a Reply