55வது பி.எஸ்.ஜி கோப்பை ஆண்கள் அகில இந்திய கூடைப்பந்து போட்டி. 17வருடங்களுக்கு பிறகு கோப்பையை கைப்பற்றிய இந்தியன் வங்கி அணி !

5வது பி.எஸ்.ஜி கோப்பை ஆண்கள் அகில இந்திய கூடைப்பந்து இறுதிப் போட்டியில் இந்தியன் வங்கி அணி வெற்றி பெற்று 17வருடங்களுக்கு பிறகு கோப்பையை கைபற்றியது.55-வது பி.எஸ்.ஜி. கோப்பைக்கான அகில இந்திய கூடைப்பந்து போட்டிகள் ஆகஸ்ட் 9 ஆம் தேதி துவங்கி 13 ஆம் தேதி வரை 5 நாட்கள் நடைபெற்று வந்தது.

இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்திய ராணுவம் அணியை எதிர்த்து இந்தியன் வங்கி அணி விளையாடியது. நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்திய இதில் இந்தியன் வங்கி அணி 79 புள்ளிகள் எடுத்து வெற்றிபெற்றது. எதிர்த்து விளையாடிய இந்திய ராணுவம் அணி 61 புள்ளிகள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.

முன்னதாக நடைபெற்ற மூன்றாவது மற்றும் நான்காவது இடத்திற்கான போட்டியில் கேரளா மாநில மின்சார வாரிய அணியை எதிர்த்து இந்திய விமானப்படை அணி விளையாடியது. இதில் கேரளா மாநில மின்சார வாரிய அணி 76 புள்ளிகள் எடுத்து மூன்றாம் இடத்தையும், இந்திய விமானப்படை அணி 73 புள்ளிகள் மட்டுமே எடுத்து நான்காம் இடத்தையும் பெற்றன.

 

இதன் பின்னர்,நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட கோவை மாநகர காவல் ஆணையர் சுமித்சரண் வெற்றி பெற்ற இந்தியன் வங்கி அணிக்கு முதல் பரிசாக ரூபாய் 1 லட்சம் மற்றும் பி.எஸ்.ஜி சுழல் கோப்பையையும், இரண்டாமிடம் பெற்ற இந்திய ராணுவம் அணிக்கு ரூபாய் 50 ஆயிரம் மற்றும் பி.எஸ்.ஜி சுழல் கோப்பையையும், முன்றாம் இடம் பெற்ற கேரளா மாநில மின்சார வாரிய அணிக்கு ரூபாய் 25 ஆயிரம் மற்றும் நான்காம் இடம் பெற்ற இந்திய விமானப்படை அணிக்கு ரூபாய் 15 ஆயிரம் பரிசாக வழங்கினார்.

மேலும்,சிறந்த விளையாட்டு வீரர்க்கான பரிசாக ரூபாய் 10 ஆயிரம் இந்தியன் வங்கி அணியின் வீரர் ஹரிராம்க்கு வழங்கப்பட்டது.


Leave a Reply