கேரளாவில் கனமழை காரணமாக ரெட் அலர்ட்!

கேரளாவில், ஆலப்புழா, எர்ணாகுளம், இடுக்கி மாவட்டங்களில், இன்று கனமழை பெய்யும் என்று ரெட் அலெர்ட்டை(ஆக.,13) இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கொல்லம், பத்தனம்திட்டா, கோட்டயம், பாலக்காடு, திருச்சூர், மலப்புரம் மாவட்டங்களில் ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மலப்புரம், கோழிக்கோடு ஆகிய மாவட்டங்களில் நாளை(ஆக.,14) ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

 

இந்த மாவட்டங்களில் 20 செ.மீ., மழை பதிவாகும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.இன்று காலை 9 மணி நிலவரப்படி மழை வெள்ளம் தொடர்பான சம்பவங்களில், கடந்த 8 ம் தேதி முதல் தற்போது வரை, 88 பேர் உயிரிழந்துள்ளனர்.  40 பேர் காணவில்லை. இதனால், உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளது.

 

மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 1,332 நிவாரண முகாம்களில் 2.52 லட்சம் பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதாக  மாநில அரசு தெரிவித்துள்ளது.இந்நிலையில், நிலச்சரிவு காரணமாக 40க்கும் மேற்பட்ட உயிர்பலி ஏற்பட்ட மலப்புரம் மற்றும் வயநாடு மாவட்டங்களை முதல்வர் பினராயி விஜயன் பார்வையிட்டார்.


Leave a Reply