கோவையில் இன்று அரசு மருத்துவமனையில் நீமோக்கால் தடுப்பூசி துவக்கவிழாவில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்து கொண்டு திட்டத்தினை துவக்கி வைத்தார். பின்னர், அரசு திட்டங்கள் குறித்து நர்சிங் மாணவிகளுடன் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்துரையாடல் நடத்தினார்.
அப்போது, நர்சிங் மாணவிகளிடம் அரசின் சுகாதார துறை மூலம் அரசு மருத்துவமனையில் செயல்படுத்தி வரும் திட்டங்கள்,அம்மா பேபி கேர் கிட்டில் எவ்வளவு பொருட்கள் உள்ளது தொடர்பாக, குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு மாணவிகள் முறையாக விளக்கம் அளிக்கவில்லை. இதனை தொடர்ந்து நர்சிங் பயிற்சி பள்ளியின் முதல்வருக்கு மெமோ அளிக்க உத்தரவிட்டார்.
மேலும்,செவிலியர் பயிற்சி பள்ளி கல்லூரி முதல்வர் தனலட்சுமி இன்று ஒரு நாள் பொறுப்பு பணியில் உள்ளார்.இவருக்கும் திட்டங்கள் குறித்து தெரியவில்லை. இதனை தொடர்ந்து அவருக்கு மேமோ அளிக்க உத்தரவிட்டார்.பின்னர்,செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர் ” கோவை அரசு மருத்துவமனையில் 9 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இரு கேத்லாப்கள் வாங்கப்பட்டுள்ளதாகவும்,இதனால் 2750 பேர் ஆஞ்சியோகிராம் சிகிச்சை பெற்றுள்ளதாகவும்,750 பேர் studding பதிக்கப்பட்டுள்ளதாகவும்,115 பேருக்கு இருதய அறுவை சிகிச்சை செய்துள்ளதாகவும் சாதனை படைத்துள்ளதாகவும் பெருமிதம் தெரிவித்தார்.
மேலும், அவர் பேசுகையில் ஒன்றரை கிலோவிற்கும் குறைவாக பிறக்கும் பச்சிளம் குழந்தைகளுக்காக ஹியூமோ கேக்கிள் என்கிற தடுப்பூசியை ஒரு புதிய முயற்சியாக இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழகத்தில் 4 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திட்டம் துவக்கப்பட்டு ஒரு மருந்தின் விலை 4 ஆயிரம் 4 முறை வழங்கப்பட உள்ளது.இத்திட்டத்தினை இன்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று துவக்கி வைத்தார்.மேலும்,கோவை அரசு மருத்துவமனையில் குறைந்த காலத்தில் சிகிச்சை மேற்கொண்டால் உயிர்களை காப்பாற்ற உதவும் ரத்தநாள அறுவை சிகிச்சை பிரிவும் இன்று கோவை அரசு மருத்துவமனையில் துவக்கப்பட்டுள்ளது.
மேலும்,இலவச அமரர் ஊர்தி சேவையை தனியாருக்கு மாற்றும் எண்ணம் இல்லை எனவும்,
எடை குறைவாக பிறக்கும் குழந்தைகள் எண்ணிக்கை தமிழகத்தில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு ஒரு சதவிகிதம் குறைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியின் போது மாவட்ட ஆட்சியர் ராசாமணி, எம்.எல்.ஏக்கள் பி.ஆர்.ஜி.அருண்குமார்,அம்மன் அர்ஜினன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள்,மருத்துவமனை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் இந்த அதிரடி நடவடிக்கையால் மருத்துவமனை ஊழியர்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.