சமீபத்தில் நடைபெற்ற வேலூர் மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் ஏசி சண்முகம் வேட்பாளராக போட்டியிட்டார். அவர் இந்த தேர்தலில் வெற்றி பெற்று விடுவார் என்றே ஆரம்ப கட்ட தேர்தல் முடிவுகள் தெரிவித்தன. ஆனால் இறுதியில் சுமார் 4 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் அவர் வெற்றி வாய்ப்பை இழந்தார்.
இந்த நிலையில் தனது தோல்விக்கு பாஜக அரசின் நடவடிக்கையை காரணம் என ஏசி சண்முகம் குற்றஞ்சாட்டியுள்ளார். வேலூர் மக்களவை தொகுதியில் தான் தோல்வி அடைந்ததற்கு முத்தலாக் சட்டம், 370 ஆவது பிரிவை நீக்கியதும் தான் காரணம் என ஏசி சண்முகம் வெளிப்படையாக தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
இதற்கு பதிலளித்துள்ள தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் ‘வேலூரில் ஏசி சண்முகம் தோல்விக்கு பாஜக காரணமல்ல என்றும் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து நீக்கியதை இஸ்லாமியர்கள் வரவேற்றனர் என்றும் கூறியுள்ளார்.ஏசி சண்முகம் திடீரென பாஜக மீது குற்றம் சாட்டி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.