மழைநீர் சேகரிப்பை சரியாக கவனிக்காத அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மழை மற்றும் வெள்ள நிவாரண பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் நடைபெற்றது.இந்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி, மாநகராட்சி ஆணையர் ஷர்வன்குமார் ஜடாவத், மாநகர காவல் ஆணையர் சுமித்சரண் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் , சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

 

மழை பாதிப்பு மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய நிவாரண பணிகள் குறித்து அதிகாரிகளுடன் அமைச்சர் ஆலோசனை நடத்தினார்.அப்போது,அதிகாரிகள் மத்தியில் பேசிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, நீலகிரி மாவட்டத்தில் மழை அதிகமாக பெய்து அந்த தண்ணீர் பவானி ஆற்றின் வழியாக பவானிசாகர் அணை செல்கின்றது.

வழியில் உள்ள மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாகவும், கடந்த முறை வெள்ளம் வந்த போதும் கரையோர மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டபோது மாற்று வீடு கட்டித்தருவதாக உறுதி அளிக்கப்பட்டு இருந்ததாகவும், அதற்காக 3 ஏக்கர் நிலம் ஏற்கனவே ஒதுக்கி இருந்த நிலையில் தற்போது 25 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அடுத்த முறை வெள்ளம் வருவதற்குள் பவானி கரையோர மக்களுக்கு வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

 

மழை நீர் சேகரிப்பில் அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும், அனைத்து வீடுகளிலும் மழை நீர் சேகரிப்பு நடைபெறுகின்றதா என்பதை அதிகாரிகள் கவனிக்க வேண்டும், மழைநீர் சேகரிப்பை சரியாக கவனிக்காத அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், மழை நீர் அனைத்தும் நிலத்தடிக்குள் செல்ல வேண்டும் எனவுமல அமைச்சர் தெரிவித்தார்.

எஸ்.ஐ.எச்.எஸ் காலனியில் உள்ள பாலம் பிரச்சினை தொடர்பாக சென்னையில் வரும் புதன் கிழமை கூட்டம் நடக்க இருப்பதாகவும் அதில் பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் எனவும் தெரிவித்தார்.


Leave a Reply