அவலாஞ்சியில் 5 வது நாளாக வெளுத்து வாங்கும் கனமழை

நீலகிரியில் ஐந்தாவது நாளாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. கடந்த நான்கு நாட்களில் அவலாஞ்சியில் 2528 மிமீ மழை பெய்துள்ளது. தென்மேற்கு பருவமழை தமிழகத்தில் தற்போது சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. தமிழகத்தில் கொங்கு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

 

கோயம்புத்தூர், திருப்பூர், சேலம் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அதேபோல் நீலகிரியில் கடந்த சில நாட்களாக வரலாறு காணாத வகையில் மழை வருகிறது. இந்த மழை காரணமாக தமிழகத்தில் நீலகிரியில்தான் மிக அதிக அளவில் பெய்து வருகிறது. நீலகிரியில் கடந்த ஐந்து நாட்களாக தொடர்ந்து விடமால் மழை பெய்து வருகிறது. அதேபோல் இன்னும் இரண்டு நாட்களுக்கு மிக கனமழை பெய்யும் என்று வானிலை மையம் கூறியுள்ளது.

அதேபோல் அவலாஞ்சி, அப்பர் பவானி ஆகிய இடங்களில் கடந்த நான்கு நாட்களில் வரலாறு காணாத மழை பெய்து வருகிறது. நேற்று ஒரே நாளில் நீலகிரியில் 450 மிமீ மழை பெய்துள்ளது. அதேபோல் இன்றும் 500 மிமீக்கும் அதிகமாக மழை பெய்யும் என்று வானிலை மையம் கூறியுள்ளது.

 

நீலகிரியில் மொத்தம் 233 இடங்கள் இப்படி மழை மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. நீலகிரியில் இதனால் 15க்கும் அதிகமான மீட்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. தரை மற்றும் வான்வழியாக அங்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

கடந்த நான்கு நாட்களில் அவலாஞ்சியில் 2528 மிமீ மழை பெய்துள்ளது. இதனால் அவலாஞ்சி மொத்தமாக தமிழகத்தில் இருந்து துண்டிக்கப்பட்டுள்ளது. அவலாஞ்சி பகுதிக்கு மக்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதேபோல் மீட்பு படையினரும் அங்கு செல்ல முடியவில்லை.


Leave a Reply