மறைந்த முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் செய்த கடைசி ட்வீட்

மறைந்த முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கடைசியாக நெகிழ்ச்சியாக பதிவு ஒன்றினை ட்வீட் செய்திருந்தார். பாஜக மூத்த தலைவரும், மத்திய முன்னாள் அமைச்சருமான சுஷ்மா சுவராஜ் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார்.

 

பிரதமர் மோடி தலைமையிலான முந்தைய ஆட்சியில் அவர் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்தவர். வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த காலத்தில் தன்னுடைய ட்விட்டரில் தீவிரமாக செயல்பட்டவர். பல்வேறு விவகாரங்கள் குறித்து அவ்வவ்போது ட்விட்டரில் கருத்துக்களையும், செய்திகளையும் பதிவிட்டு வந்தவர்.

இந்நிலையில், தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கடைசியாக காஷ்மீர் மறுவரையறை மசோதா தாக்கல் செய்யப்பட்டது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.அதில், ‘பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி. என்னுடைய வாழ்நாளில் இந்த தருணத்தை பார்ப்பதற்காகத் தான் காத்திருந்தேன்’ என அவர் குறிப்பிட்டிருந்தார்.

 

அதற்கு முன்பாக நேற்றும், மாநிலங்களவையில் காஷ்மீர் மறுவரையறை மசோதாவை உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்து பேசியதற்கு வாழ்த்து தெரிவித்து சுஷ்மா சுவராஜ் ட்வீட் செய்திருந்தார்.


Leave a Reply