உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மத்திய முன்னாள் அமைச்சர் சுஷ்மா சுவராஜ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மாரடைப்பு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சுஷ்மா சுவராஸ் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு சுஷ்மா சுவராஜ்க்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. நிதின் கட்காரி, ஹர்ஷ வர்தன் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் உடனடியாக எய்ம்ஸ் மருத்துவமனைக்கு விரைந்தனர். இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி சுஷ்மா சுவராஸ் காலமானார்.
அவரது பாஜக தலைவர்கள் மற்றும் தொண்டர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்திரா காந்திக்கு பின்னர் வெறியுறவுத் துறை அமைச்சராக இருந்த இரண்டாவது பெண் சுஷ்மா சுவராஜ்.ஹரியானா மாநிலம் அம்பாலாவைச் சேர்ந்த சுஷ்மா சுவராஜ்உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றியவர்.
7 முறை நாடாளுமன்ற எம்பியாக இருந்தார். கடந்த ஆண்டு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட அவர், பின்னர் தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்தார்.