கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவிற்கு தமிழக துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் வாழ்த்து

கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவிற்கு தமிழக துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில், ‘நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவுக்கு வாழ்த்துகள். தங்களின் ஆட்சிக் காலத்தில் இரு மாநிலங்களுக்கும் இடையே சுமூக உறவு பலமடையும் என நம்புகிறேன். கர்நாடகாவை புதிய உச்சத்திற்கு கொண்டு செல்வீர்கள் என நம்புகிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, கர்நாடகாவில் நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு தோல்வியடைந்த நிலையில், வெள்ளிக்கிழமை மாலை புதிய முதலமைச்சராக பாஜ‌கவைச் சேர்ந்த எடியூரப்பா பதவியேற்றார். இந்நிலையில் பெங்களூருவில் உள்ள சொகுசு விடுதியில் தங்கியுள்ள பாஜக எம்.எல்.ஏ.க்களை நேற்று மாலை சந்தித்து எடியூரப்பா ஆலோசனை நடத்தினார்.

 

இந்நிலையில் இன்று காலை 11 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு தொடங்கியது. தொடக்கத்தில் பேரவையில் எடியூரப்பா உரையாற்றினார். பின்னர் தொடங்கிய நம்பிக்கை வாக்கெடுப்பில் எம்.எல்.ஏ.க்கள் தங்களது ஆதரவை குரல் வாக்கெடுப்பு மூலம் பதிவு செய்தனர். இதில் தேவையான பெரும்பான்மையை எட்டி தன்னுடைய முதலமைச்சர் பதவியை எடியூரப்பா தக்கவைத்துக்கொண்டார்.


Leave a Reply