பேத்தியை தனியே அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை!

கன்னியாகுமரியில் பேத்தியை பாலியல் வன்கொடுமை செய்த மீனவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நாகர்கோவில் விரைவு மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.கன்னியாகுமரி மாவட்டம், சின்னமுட்டம் பகுதியை சேர்ந்தவர் இருதயதாசன் 58 வயது மீனவரான இவர், தனது மூத்த மகனின் 8 வயது மகளுடன், அப்பகுதியை சேர்ந்த 2 சிறுமிகளை கீழமணக்குடி பகுதிக்கு அழைத்து சென்றுள்ளார்.

 

அங்கு விளையாடிய சிறுமிகள் மூவரில், தனது பேத்தியை தனியே அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். கடந்த 2016ம் ஆண்டு, ஜனவரி 2ம் தேதி நடந்த இச்சம்பவம் தொடர்பாக, சிறுமியின் பெற்றோர், கன்னியாகுமரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகார் அளித்தனர்.அதன்பேரில் போக்சோ சட்டம், உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, இருதயதாசனை போலீசார் கைது செய்தனர்.

 

இதுதொடர்பான வழக்கு நாகர்கோவில் விரைவு மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, இருதயதாசன் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதால் 10 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். அத்துடன் 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தார். அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பில் குறிப்பிட்டார்.


Leave a Reply