ஃபேஸ் புக்கில் பழகி கல்யாணம் முடித்து தனிக்குடித்தனம் நடத்திய மாணவி தற்கொலை

Publish by: --- Photo :


ஒரத்தநாட்டில் பேஸ்புக் மூலம் காதலித்து திருமணம் செய்துகொண்டு ரகசியமாக குடும்பம் நடத்திய அரசு கால்நடை மருத்துவக்கல்லூரி மாணவி தூக்கில் மர்மமாக இறந்து கிடந்தார். அவர் கொலை செய்து தொங்கவிடப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். இது தொடர்பாக போதையில் மயங்கி கிடக்கும் கணவனிடம் விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

 

ஈரோடு மாவட்டம் பாலவாடி கிராமத்தை சேர்ந்தவர் சுப்ரமணியன். இவரது மகள் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் உள்ள அரசு கால்நடை மருத்துவ கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வந்தார். இவருக்கு முகநூல் மூலம் சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அடுத்த டி.புதுக்கோட்டையை சேர்ந்த எலக்ட்ரீசியன் சதீஷ்குமார் என்பவரின் நட்பு கிடைத்தது.இது நாளடைவில் காதலாக மலர்ந்தது. வெவ்வேறு சமூகத்தை இருவரும் 2 ஆண்டுகளாக பேஸ்புக்கில் பேசி வந்ததுடன் அடிக்கடி நேரிலும் சந்தித்து வந்தனர்.

 

இந்நிலையில் கடந்த ஒரு வருடத்துக்கு முன் வீட்டுக்கு தெரியாமல் பதிவு திருமணம் செய்து கொண்டனர். ஒரத்தநாட்டில் விடுதியில் தங்கியிருப்பதாக கூறிவிட்டு, கணவருடன் தனியாக ஒரத்தநாடு எழுத்துக்கார தெருவில் வீடு வாடகை எடுத்து குடும்பம் நடத்தி வந்ததுடன் கல்லூரிக்கும் சென்று வந்தார். மகள் திருமணம் செய்துகொண்டு கணவருடன் தனியாக வாழ்வது பெற்றோருக்கு தெரியவில்லை.

விடுதியில் தங்கி கல்லூரியில் படிப்பது போன்றே வீட்டில் காட்டிக்கொண்ட மாணவி அவ்வப்போது ஊருக்கு சென்றுவிட்டு வருவார். இந்நிலையில் இன்று காலை மாணவி வீட்டில் யாரும் நடமாட வில்லை என்பதால் அக்கம் பக்கத்தினர் போய் பார்த்தபோது இந்துமதி தூக்கில் மர்மமான முறையில் சடலமாக தொங்கினார். அருகே நிதானம் இன்றி போதையில் சதீஷ்குமார் கிடந்தார்.

 

தகவலறிந்த ஒரத்தநாடு போலீசார் அங்கு வந்து மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தஞ்சை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். சதீஷ் குமாருக்கு போதை தெளிந்த பின்னர் விசாரித்தால்தான், இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் மனைவியை அவர் கொன்று தூக்கில் தொங்கவிட்டாரா அல்லது குடிகாரரை திருமணம் செய்து ஏமாந்ததால் மனமுடைந்து அவரே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாரா என்பது தெரியவரும் என போலீசார்தெரிவித்தனர்.


Leave a Reply