தேனியில் அதிமுக பிரமுகர் எரித்துக்கொலை

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் அதிமுக பிரமுகர் எரித்துக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தேனி மாவட்டம் ஆண்டிபட்டியை அடுத்த டி.வி.ரங்கநாதபுரத்தில் உள்ள விவசாய தோட்டத்தில் எரிந்த நிலையில் ஒருவரின் சடலம் இருப்பதாக போலீசாருக்கு பொதுமக்கள் தகவல் அளித்துள்ளனர்.

தகவலின் பேரில் விரைந்து வந்த காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.முதற்கட்ட விசாரணையில், எரித்துக் கொலை செய்யப்பட்ட நபர் அதிமுக பிரமுகர் சதீஷ்குமார் என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து கொலை செய்வர்கள் யார் என்பது குறித்துபோலீசார் தீவிர விசாணை மேற்கொண்டு வருகின்றனர்.


Leave a Reply