டிக்டாக் செயலிக்கு போட்டியாக ஃபேஸ்புக் நிறுவனம் ஒரு புதிய செயலியை தொடங்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.சமீப காலங்களில் இளைஞர்களை அதிகம் கவர்ந்த சமூக வலைத்தளங்களில் ஒன்றாக டிக்டாக் செயலி இருந்து வருகிறது. இந்தச் செயலியில் இளைஞர்கள் மகிழ்ச்சியாக பாட்டு பாடி, நடனம் ஆடி தங்களின் வீடியோக்களை பகிர்ந்து வருகின்றனர்.
இந்தியாவில் இந்தச் செயலியை தடைச் செய்ய கோரிய வழக்கும் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இதற்காக இந்தியாவில் தற்காலிகமாக இரண்டு வாரங்கள் டிக்டாக் செயலியின் பதிவிறக்கம் இந்தியாவில் தடை செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் ஃபேஸ்புக் நிறுவனம் டிக்டாக் செயலிக்கு போட்டியாக ஒரு புதிய செயலியை தொடங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இதற்காக ட்விட்டர் நிறுவனத்தில் வீடியோ தளத்தில் பணியாற்றிய ஜேசன் டாஃப் தற்போது ஃபேஸ்புக் நிறுவனத்தில் பணியமரித்தப்பட்டுள்ளார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த வாரம் ஃபேஸ்புக் நிறுவனம் புதிய செயலிகளுக்கான சோதனைக் குழு ஒன்றை நியமித்திருந்தது. இந்தக் குழு சோதனை முயற்சியாக சில புதிய செயலிகளை வாடிக்கையாளர்களுக்கு வெளியிடும் எனத் தெரிவிக்கப்பட்டது. இந்தச் சூழலில் இக்குழுவிற்கு ஜேசன் டாஃப் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். எனவே டிக்டாக்கிற்கு போட்டியாக ஒரு புதிய வீடியோ செயலி உருவாக வாய்ப்பு அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.