திருவாடானையில் ஸ்ரீ மகாலிங்கம் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்ற

திருவாடானை வர்ண தீர்த்த வடகரையில் உள்ள ஸ்ரீ மகாலிங்கம் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டார்கள். ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா, திருவாடானை வர்ணதீர்த்த தெப்பக்குளம் வடக்கரையில் அமைந்திருக்கும் ஸ்ரீ மகாலிங்கம் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக ஞாயிற்று கிழமை அனுக்ஞை பூஜை, கணபதி பூஜை, முதற்கால பூஜையுடன் தொடங்கியது.

அதனை தொடர்ந்து திங்கள் கிழமை காலை கோவில் முன்னதாக அமைந்திருக்கும் யாகசாலையில் இரண்டாம் கால பூஜை, கோ பூஜை, ஆகிய பூஜைகள் நடைபெற்றதை தொடர்ந்து புனித நீர் கலசங்களில் வைத்து பூஜிக்கப்பட்டு கலசங்களை சிவாச்சாரிகள் கைகளில் ஏந்தி வேதமந்திரங்கள் முழங்க கலசங்களில் ஊற்றினார்கள். பக்தர்கள் பரவசத்தில் ஓம் நமச்சிவாயா என கோசங்கள் எழுப்பி வழிபட்டனர்கள். இந்த கும்பாபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டார்கள்.


Leave a Reply