--- --:--:-- --

பெருந்தலைவர் காமராஜரின் 117 ஆவது பிறந்தநாளை காமராஜரின் திருஉருவ சிலைக்கு கோவை நாடார் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் மாலைஅணிவித்தனர்

Capture21

பெருந்தலைவர் காமராஜரின் 117 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு கோவை மாவட்டம் வடகோவையில் அமைந்துள்ள காமராஜரின் திருஉருவ சிலைக்கு கோவை நாடார் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் மாலைஅணிவித்தனர்.
பெருந்தலைவர் காமராஜரின் 117 ஆவது பிறந்தநாள் கொண்டாட்டம் உலகமெங்கும் இன்று கொண்டாடப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக கோவையில் வடகோவை பகுதியில் அமைந்துள்ள காமராஜரின் திருவுருவச்சிலைக்கு கோவை நாடார் சங்கம் சார்பில் தலைவர் சூலூர் சந்திரசேகர் செயலாளர் ராஜா ஆகியோர் தலைமையில் சுமார் 200க்கும் மேற்பட்டோர் அவருடைய திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

பின் செய்தியாளரிடம் பேசிய தலைவர் சூலூர் சந்திரசேகர் தமிழகத்தில் வாழ்ந்த மிக அற்புதமான தலைவர் காமராஜர் அவருடைய திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து பிறந்தநாளை கொண்டாடுவதில் கோவையில் உள்ள அனைத்து நாடுகளும் பெருமை கொள்கிறோம் இப்பேர்ப்பட்ட தலைவர் இனி எப்பொழுதும் பிறப்பதில்லை காமராஜர் போல் அப்பனுக்கு இல்லா வாழ்க்கை வாழ நாம் உறுதி ஏற்போம் என்று கூறினார் மேலும் இந்நிகழ்ச்சியில் முன்னாள் மேயர் வெங்கடாச்சலம் மற்றும் காயத்திரி மற்றும் சங்க நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் என ஏராளமானோர் கூடியிருந்தனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon