நாளை சந்திரகிரகணம்! கணவன் மனைவி உடலுறவை தவிர்க்க வேண்டும்

Publish by: --- Photo :


ஆடி 1-ஆம் தேதி ஜூலை 17-ம் நாள் அதிகாலை 1.31 மணி முதல் 4.30 மணி வரை உத்திராடம் நட்சத்திரத்தில் மகர ராசி மேஷ லக்னத்தில் இந்த ஆண்டானுடைய கடைசி சந்திரகிரகணம் தோன்றுகிறது. இந்த கிரகணம் இந்தியாவில் தெரியும்.அதனால் இந்தநேரத்தில் தாம்பத்திய உறவை தவிர்க்க வேண்டும் என்கின்றனர் ஜோதிடர்கள். கதிர்வீச்சுகள் கடுமையாக இருக்குமென்பதால் நாம் அனைவரும் சில விஷயங்களை செய்யக்கூடாது என்றும் சில விஷயங்கள் நம் உடல் நலனை பாதிக்கும் என்று கூறப்படுகிறது.

 

பொதுவாக சந்திர கிரகணத்தின் போது கிரகணம் முடியும் வரை நாம் உணவை தவிர்க்க வேண்டும்.அதற்குக் காரணம் கதிர்வீச்சுகள் நம்மீது படும் என்பதால், மேலும்அது உணவிலும்,உடலிலும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது என்று கூறுகின்றனர்.கிரகண ஆரம்பம் ஜூலை 17 அதிகாலை 1 மணி 30 நிமிடம் 52 விநாடி முடிவு அதிகாலை 4 மணி 30 நிமிடம்.கிரகண தோஷமுள்ள நட்சத்திரங்கள் பூராடம், உத்திராடம்,திருவோணம், கிருத்திகை,உத்திரம் கிரகண தோஷமுள்ள நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் சாந்தி செய்து கொள்ளவும்.ஆக,மேற்கொண்ட ராசியினர் இன்று இரவு உணவினை 6 மணிக்குள் சாப்பிட்டு முடித்து விட வேண்டும்.

பெண்கள் மாலை நேரத்தில் தலையில் பூக்கள் வைத்துக்கொள்வதை தவிர்க்கவும்.அப்படியேனும் முக்கியமாக மலர் சூட வேண்டுமென்றால் மதியம் 12 மணிக்கு முன்பே செய்து விடுங்கள். ஏனென்றால் சுக்கிரனின் கிழமையான வெள்ளிக் கிழமையில் கிரகணம் ஆரம்பித்து சுக்கிரனுடைய கிரகண வீடான 8-ல் மறைவதால் மேற்கொண்டவர்கள் வெளியே செல்லாமல் இருப்பது நல்லது.அப்படியேனும் தவிர்க்க முடியாத நிலையில் நீங்கள் வெளியே வந்தால் நீங்கள் அணிந்திருக்கும் மேலாடையில் நுனியில் சிறிது நெல் அல்லது பச்சரிசியை முடித்த வைத்துக்கொண்டு செல்லுங்கள்.

முன்னோர்க்கு தர்ப்பணம் செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் கிரகணம் முழுதாக முடிந்த பின் கொடுக்க வேண்டும்.கணவன் மணைவி கிரகன காலத்தில் உடலுறவு வைத்துக் கொள்ளவே கூடாது.ஏனென்றால் கிரகன சமயத்தில் கர்ப்பம் தரித்தால் குழந்தை குறையுடன் பிறக்க நேரிடும்.ஆக உடலுறவை தவிர்ப்பது நல்லது.


Leave a Reply