எங்க கூட உறவு வச்சுக்கணும் இல்லாட்டி உன்னை…!

தன்பால் உறவுக்கு மறுப்பு தெரிவித்த இளைஞரை அவரது நண்பர்களே கழுத்தை நெறித்து கொலை செய்தது வேலூர் மாவட்ட மக்களிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆனந்த் என்பவர் நாட்றம்பள்ளி அடுத்த வெலக்கல் நத்தம் பகுதியை சேர்ந்தவர் . இவர் வயது 20. இவருடைய நண்பர்கள் பாலாஜி, கார்த்திக். வாட்ஸ்ஆப் குரூப் மூலம் பழக்கமானவர்கள். பாலாஜிக்கு 23 வயது, கார்த்திக்கு 22 வயதாகிறது. ஆனால் நண்பர்களை ஆனந்த் நேரில் சந்தித்து இல்லை.

 

இந்நிலையில், ஆனந்தை தாங்கள் கூறும் இடத்திற்கு வருமாறு கடந்த மாதம் 13-ம் தேதி கார்த்திக்கும், பாலாஜியும் கூப்பிட்டுள்ளனர். நண்பர்கள் தானே என்றும் மற்றும் அவர்களை சந்திக்கும் ஆர்வத்தில் ஆனந்தும் சொன்ன இடத்துக்கு சென்றார். அப்போது ஆனந்தை தன்பால் உறவுக்கு இரு நண்பர்களும் கட்டாயப்படுத்தி உள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் ஆனந்த் அந்த தவறான உறவுக்கு மறுப்பு சொல்லி உள்ளார்.

 

பலமுறை தொடர்ந்து வற்புறுதியுத்தியும் ஒத்து கொள்ளாததால் கார்த்திக்கும் பாலாஜியும் ஆத்திரமடைந்தனர்.  அவர்கள் இருவரும் சேர்ந்து ஆனந்தை கொலை செய்து உள்ளனர். கொலை செய்து சடலத்தை பச்சூர் அருகே ரயில்வே தண்டவாளத்தில் வீசி சென்றுவிட்டனர்.ரயில்வே போலீசார், ஆனந்தின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வந்தனர்.

 

ஆனந்த் ஒரு வேளை காதல் தோல்வியின் காரணமாகவோ அல்லது வேறு குடும்ப சூழ்நிலை காரணமாகவோ ரயில் முன் விழுந்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்றும், போலீசார் சந்தேகித்து வந்தனர்.அந்த சமயத்தில்தான், ஆனந்தின் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வந்தது. அதில், ஆனந்த் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்தது.

 

இதன்பின்னர் போலீசார், ஆனந்தின் செல்போன் நம்பர்களை ஆய்வு செய்தபோதுதான், பாலாஜி மற்றும் கார்த்திக் இருவரிடம் இருந்து கடைசியாக அழைப்பு வந்திருந்தது தெரியவந்தது. பிறகு, அவர்கள் இருவரை பிடித்து விசாரித்ததில், கொலைக்கான காரணத்தை தெரிவித்தனர். இதையடுத்து, இருவரும் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.


Leave a Reply