அரசால் வழங்கப்படும் சலுகைகள் முறைப்படுத்தபட்டால், சர்வதேச அளவில் இந்திய வீரர்களும் சாதிக்க முடியும்!! மோட்டார் பயிற்சியாளர் கருத்து!!!

ரேஸ் பந்தய வீரர்களுக்கென அரசால் வழங்கப்படும் சலுகைகள் சரி வர முறைப்படுத்தப்பட்டால் வரும் காலங்களில் சர்வதேச பந்தயங்களில் இந்திய வீரர்களும் சாதிக்க முடியும் கோவையில் பிரபல மோட்டார் பந்தய பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.

சமீபகாலமாக இந்தியாவில் மிக வேகமாக வளர்ந்து வரும் ஸ்போர்ட்டிவ் பைக்குகளுக்கான சந்தையில் பல சூப்பர் பைக்குகள் இந்தியாவில் கிடைக்க தொடங்கி உள்ள நிலையில் தொழிற்முறை பைக் ரேஸ் வீரராக ரேசில் கலந்து கொள்வதற்கு இளம் மாணவர்கள் மட்டுமல்லாது பெண்களும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில் இது போன்று பைக் ரேஸ்களில் கலந்து கொள்வதற்கு முறையான பயிற்சி வழங்குவதற்கென கோவை சி.ஆர்.ஏ.மோட்டார்ஸ் சார்பாக இரண்டு நாள் பயிற்சி முகாம் நடைபெற்றது.கோவை செட்டிபாளையம் கரி மோட்டார்ஸ் ரேஸ் ட்ராக்கில் நடைபெற்ற இதில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆண்கள்,பெண்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதில் சி.ஆர்.ஏ.மோட்டார்சின் இயக்குனரும், பயிற்சியாளரும் ஆன தருண் குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில்,இந்த பயிற்சி முகாமில் பங்கேற்று தங்களது சூப்பர் பைக்கை இலகுவாக ஓட்டுவதற்கான நுணுக்கங்களை முறையாக பயிற்சி அளித்து,முதல் கட்டமாக உள்நாடுகளில் நடைபெறும் பந்தயங்களில் கலந்து கொள்வதற்கு தயார் செய்யப்படுவதாக, கூறிய அவர்,வரும் ஆண்டுகளில் சர்வதேச பந்தயங்களில் கலந்து கொள்ளும் விதமாக தற்போது வீரர்கள் தயார் ஆகி வருவதாக தெரிவித்தார்.தொடர்ந்து அவர் பேசுகையில் ரேஸ் பந்தய வீர்ர்களுக்கென அரசால் வழங்கப்படும் சலுகைகள் சரி வர முறைப்படுத்தப்பட வேண்டும் எனவும் கேட்டு கொண்டார்.


Leave a Reply