சந்திராயன் திட்டத்தை இஸ்ரோ எப்படி முன் எடுக்கும்?

2003 ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் வாஜ்பாய் ஆட்சியில் சத்திராயன் திட்டம் அறிவிக்கப்பட்டது. இஸ்ரோவின் 5 ஆண்டு கால கடின உழைப்பின் பயனாக 2008 ஆம் ஆண்டு சந்திராயன் 1 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. அதன் தொடர்ச்சியாக 2008 ஆம் ஆண்டில் சத்திராயன் 2 விண்ணில் ஏவுவதற்கான திட்டமிடல் தொடங்கியது. ஆனால்,ரஷ்ய விண்வெளி நிறுவனத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2011 ஆம் ஆண்டு சந்திராயன் 2வை விண்ணில் செலுத்த முடியவில்லை.

 

ஜி‌எஸ்‌எல்‌வி எம்‌கே-3 விண்கலம் மூலம் சந்திராயன் 2 வை திங்கழ் கிழமை அதிகாலை விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டம் இட்டு உள்ளது. வரும் செப்டம்பர் 6 ஆம் தேதி சந்திராயன் 2 நிலவில் தரையிறங்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு பிறகு நிலவில் விண்கலத்தை தரையிறக்கும் நான்காவது நாடு என்ற சிறப்பை இந்தியா பெற இருக்கிறது.சந்திராயன் 2 வில் ORBITTER, LANDER விக்ரம், ROVER பிரக்யான் என மூன்று முக்கியமான கருவிகள் உள்ளன.நிலவின் வளிமண்டலத்தில் ORBITTER ஓராண்டிற்கு வலம் வந்து ஆய்வு செய்யும்.

 

ROVER பிரக்யான் ஒரு லூனார் நாளுக்கு சந்திரனில் ஆய்வு செய்யும். ஒரு லூனார் நாள் என்பது பூமியின் கணக்குப்படி 14 நாட்கள் ஆகும். ROVER பிரக்யான் மூலம் எந்த நாடுமே போகாத நிலவின் தென் துருவத்தில் ஆய்வு செய்ய இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. ROVER பிரக்யான் அனுப்பும் தகவல்களை கொண்டு நிலவு உருவானது குறித்து ஆய்வு செய்யவும் திட்டமிட்டுள்ளது. சந்திராயன் 2 விண்ணில் ஏவப்படுவது தூர்தர்ஷன் மற்றும் இஸ்ரோ இணைய தளத்தில் நேரடி ஒளிபரப்பாக உள்ளது.


Leave a Reply