படு கொலை செய்யப்பட்ட கஞ்சா வியாபாரி உடல் உயர்நீதிமன்ற உத்தரவுப்படி மீண்டும் தோண்டி எடுப்பு

இராமநாதபுரத்தில் படு கொலை செய்யப்பட்ட கஞ்சா வியாபாரி உடல் மதுரை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி அதிகாரிகள் முன்னிலையில் மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டது.இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை புதுத்தெரு முகமது இம்ரான் கான். இவர் கீழக்கரை பகுதியில் நீண்ட நாட்களாக கஞ்சா வியாபாரம் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த லுக்மா கை கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொலை செய்ததாக அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. இந்தநிலையில், கஞ்சா வியாபாரி சாகுலுக்கும், முகமது இம்ரான் கானுக்கும் இடையே தொழில் போட்டியால் அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

இதனையடுத்து சாகுல், முகமது இம்ரான் கானை கொலை செய்து கீழக்கரை கடற்கரை ஓரம் புதைத்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக இம்ரான் கான் உறவினர்கள், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்தனர்.

நீதிமன்ற உத்தரவுப்படி, கீழக்கரை போலீசார், முகமது இம்ரான் கானை கொலை செய்து கீழக்கரை கடற்கரை ஓரம் புதைத்ததை சாகுல் ஒப்புக்கொண்டார் . அவர தகவலின் படி, தாசில்தார் சிக்கந்தர் பமீதா, டிஎஸ்பி., முருேகேசன் தலைைமையில் முகமது இம்ரான் கான் உடல் தோண்டி எடுக்கப்பட்டது.


Leave a Reply