நீட் தேர்வுக்கு எதிராக கொந்தளித்த நடிகர் சூர்யா

நீட் போன்ற தேர்வுகளால் அரசு பள்ளி  மாணவர்களின் வாய்ப்புகள் பறிக்கப்படுகின்றன என்று நடிகர் சூர்யா கருத்து தெரிவித்து உள்ளார். சிவக்குமார் கல்வி அறக்கட்டளையின் 40 ஆம் ஆண்டு விழா சென்னை வடபழனியில்  நடைபெற்றது. அப்போது பேசிய நடிகர் சிவக்குமார் உடலின் ஆரோக்கியத்தை பேணிகாக்க யோகா செய்வது அவசியம்  என்று  மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார். அவரை தொடர்ந்து பேசிய சூர்யா நீட் போன்ற நுழைவுத் தேர்வுகளால் சமநிலை பாதிக்கப்படுவதாகவும் , அரசு பள்ளி மாணவர்களின் வாய்ப்புகள் மறுக்கப்படுவதாகவும் வேதனையுடன் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் நடிகர் கார்த்தி  மற்றும் கல்வியாளர்கள் மாடசாமி மற்றும் வசந்தி தேவி உள்ளிட்ட பலரும்  கலந்து கொண்டார்கள்.


Leave a Reply